நல்ல நடிகை

நல்ல நடிகை

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சுனைனாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் பலரது பாராட்டுக்களை அள்ளியது.

சுனைனாவின் ட்ரிப்

சுனைனாவின் ட்ரிப்

சாம் ஆண்டனின் உதவி இயக்குநரான டென்னிஸ் ட்ரிப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். சில்லுக்கருப்பட்டி படத்திற்கு பிறகு சுனைனாவுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வரிசைக் கட்டி வருகிறது. யோகி பாபு, கருணாகரன் உடன் இணைந்து இந்த ட்ரிப் படத்தில் நடித்துள்ளார்.

பிட் புல்லுடன்

உலகளவில் வெறிப்பிடித்த நாயாக கருதப்படும் பிட்புல் நாயுடன் ட்ரிப் படத்திற்காக சுனைனா போட்டுள்ள ஸ்டன்ட் காட்சியின் அதிரவைக்கும் மேக்கிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சுனைனா தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். சுனைனாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் செம தில்லுமா உனக்கு என பாராட்டி வருகின்றனர்.

பிட்புல் பெயர்

ட்ரிப் படத்தின் த்ரில்லான ஸ்டன்ட் காட்சியின் மேக்கிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை சுனைனா, அந்த பிட்புல்லின் பெயர் ராம்போ என்றும் கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார். கேட்ச் என சொன்னதும் சுனைனா மீது விழுந்து புராண்டும் பிட்புல்லின் காட்சியை பார்த்து சுனைனா ரசிகர்கள் பதறி போயுள்ளனர்.

ஓ மை காட்

சுனைனாவின் இந்த ரிஸ்க்கான ஸ்டன்ட் காட்சியை பார்த்த ரசிகர்கள், அவரின் டெடிகேஷன் லெவலை பாராட்டி வருகின்றனர். மேலும், பிட்புல் கூட நடிக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா இருங்க மேடம், அது ரொம்ப ரிஸ்க், ஓ மை காட் டேக் கேர் என பலரும் கமெண்ட் செக்‌ஷனில் அந்த காட்சியை பார்த்து அதிர்ந்து போய் பதிவிட்டு வருகின்றனர்.
Source link